15665. என் கண்களை ஏறெடுப்பேன்

1 என் கண்களை ஏறெடுப்பேன்,
ஒத்தாசை வருமே,
வானமும் பூமியும்
படைத்தவர் எனக்கீவார்.

2 உன் பாதம் கல்லில் இடறா,
கண்ணுரங்காமலே,
இஸ்ரவேலரையும் காத்தவர்
உன்னையும் காப்பார்.

3 உன் கேடகமும் நிழலும்,
அருகிருந்துமே,
இரா சந்திரன் உன்னை ஒன்றும்
செய்யா பகல் சூர்யனும்.

4 உன் ஆன்மாவையும் காப்பாரே,
எல்லாத்தீங்கினின்றும்,
நீ போகையிலும் வரும் போதும்
காத்தருள்வாரே.

Text Information
First Line: என் கண்களை ஏறெடுப்பேன்
Title: என் கண்களை ஏறெடுப்பேன்
English Title: I to the hills will lift my eyes
Translator: S. John Barathi
Language: Tamil
Source: The Psalter (Pittsburg: United Presbyterian Board of Publication, 1912)
Copyright: Public Domain
Tune Information
Name: [என் கண்களை ஏறெடுப்பேன்]
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us