15685. ஓசையில்லா, தூய இரா

1 ஓசையில்லா, தூய இரா,
யாவுமே அமைதியாய்,
கன்னி மைந்தனும் அன்னையுமாய்,
தூய பாலன் பொன் மேனி யுடன்,
தூங்கு சாந்தமாய் நீயும்,
தூங்கிடு சாந்தமாய் நீ.

2 ஓசையில்லா, தூய இரா,
மேய்ப்பரும் நடுங்கிட,
விண்ணில் பேரொளி வீசிடவே,
தேவ தூதரும் பாடிடவே,
கிறிஸ்து தோன்றினாரே,
கிறிஸ்தேசு தோன்றினாரே.

3 ஓசையில்லா, தூய இரா,
தந்தையின் மைந்தனாம்,
ஒளிர்விடும் உந்தன் திவ்ய முகம்,
மீட்பின் வாஞ்சையின் சாந்தமன்றோ?
உந்தன் முன்னணை வந்தோம்,
உந்தன் முன்னணை வந்தோம்.

4 ஓசையில்லா, தூய இரா,
விந்தையாய் நட்சத்திரம்,
ஒளிர்ந்து வீசி நல் பாதை காட்ட,
சேர்ந்து தூதருடன் பாடுவோம்,
பிறந்தார் மீட்பரின்று,
பிறந்தார் கிறிஸ்து இன்று.

Text Information
First Line: ஓசையில்லா, தூய இரா
Title: ஓசையில்லா, தூய இரா
English Title: Silent night, holy night
Author: Josef Mohr
Translator (English): John F. Young
Translator (Tamil): S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [ஓசையில்லா, தூய இரா]
Composer: Franz Xaver Gruber
Key: E♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us