| 15571 | The Cyber Hymnal#15572 | 15573 |
| Text: | ஆத்மமே சூரியனுடன் விழித்தெழுவாய் |
| Author: | Thomas Ken |
| Translator: | S. John Barathi |
| Tune: | [சூரியனுடன் விழித்தெழு] |
| Composer: | Louis Bourgeois |
| Media: | MIDI file |
1 சூரியனுடன் விழித்தெழு
அன்றன்றுள்ள வேலை நீ செய்,
சோம்பல் தள்ளி உற்சாகமாய்,
இந்நாள் பங்கை செய் பலியாய்.
2 உன் காலம் நேரம் காப்பாயே,
ஒவ்வொரு நாளும் வெகுமதி,
உன் தாலந்தை வளர்த்திடு,
அந்நாளுக்காய் உன்னை காப்பாய்.
3 சம்பாஷணையில் தூய்மையாய்,
உன் மனசாட்சி தெளிவாய்,
உன் உள், புரம் காண்பார் தேவன்,
உன் சிந்தை அவர் காண்கிறார்.
4 விழித்தெழு என் மனமே,
தூதரின் கீதம் சேர்ந்திடு,
இரா பகலாய் அழைக்கிறார்,
இராஜாவாய் என்றும் ஆள்பவர்.
5 பாடகர்க்குழாம் நீர் எழுவீர்,
உம் பக்தி பண் நீர் எழுப்ப,
நான் உம்மைப்போல் என் வாழ்விலே,
ஆராதித்தே நான் கழிப்பேன்.
| Text Information | |
|---|---|
| First Line: | சூரியனுடன் விழித்தெழு |
| Title: | ஆத்மமே சூரியனுடன் விழித்தெழுவாய் |
| English Title: | Awake, my soul, and with the sun |
| Author: | Thomas Ken |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [சூரியனுடன் விழித்தெழு] |
| Composer: | Louis Bourgeois |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |