
Author: Eliza E. Hewitt; S. John Barathi Appears in 1 hymnal Refrain First Line: தனியனல்லேன் நான் தனியனல்லவே, Lyrics: 1 அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ,
மா மகிமைப்பிரகாசம், காட்டுதென்வழி,
மேக இருளினூடே, வாக்களிக்கும் ஒளி,
என்றும் கைவிடாதுன்னை தனியனாகவே,
பல்லவி:
தனியனல்லேன் நான் தனியனல்லவே,
நான் காப்பேன் என்றவர் காப்பார்,
என்றும் கைவிடாரே, என்றும் கைவிடாரே.
2 வாடும் மலர்கள் சூழ காய்ந்துதிரும் புஷ்பம்,
பூவின் சூரியன் மங்கும், வான் பிரகாசிக்கும்,
சாரோனின் ரோஜா, தானாய் பிரகாசிக்கும்,
இயேசு விண்ணின் பிரகாசம் என்னை விட்டகலாரே, [பல்லவி]
3 முன்னே அறியா பாதை அருகில் அபாயமே,
என் மீட்பர் எந்தன் சமீபம், ஆற்றி தேற்றுவார்,
ஆனந்த பறவைக்கூட்டம், என்னுள்ளில் துள்ளுதே,
இனிமையாக பாடும் என்னைக்கைவிடாறென்று. [பல்லவி] Used With Tune: [அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ]
அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ