| 15627 | The Cyber Hymnal#15628 | 15629 |
| Text: | உம் கரத்தில், உண்மையின் ஆண்டவா |
| Author: | Isaac Watts |
| Translator: | S. John Barathi |
| Tune: | [தந்தேனிப்போ என் ஆன்மாவை] |
| Composer: | Hugh Wilson |
| Media: | MIDI file |
1 தந்தேனிப்போ என் ஆன்மாவை,
உண்மையின் ஆண்டவா,
காத்தே என்னை மீட்டீர் நீரே,
சாவினின்று தூக்கி.
2 என் ஏக்கமும் என் பயமும்,
வந்தேகும் குழப்பமும்,
வேதனை பாவம் வியாகுலம்,
மாய்த்தென்னை வீழ்த்துதே.
3 என் காலம் உம் கைகளிலே,
நான் மண்ணாய் போனாலுமே,
ஒளிந்தே நான் வரும் இடம்,
கர்த்தாவே உம்மிடம்.
4 என் மீது வீச காண்பியும்
உம் ரூபம் அடியேன்மேல்,
கிருபையாலே நீர் மீட்டிடும்,
நான் உம்முடையோனே.
5 விரைந்தே சிந்திக்காமலே,
சாவேனென்றெண்ணினேன்,
உம் கண்முன்னே காணாமலே,
ஆனாலும் கேட்டீரே.
6 இலவசம் உம் கிருபையே,
உம் தயை விந்தையே,
பயத்துடன் உம் சமூகம்
வந்தேன் வாக்கை நம்பி.
7 நேசிப்போம் நாமும் உண்மையாய்,
ஆம் பாடி போற்றியே,
நம் வேண்டல் யாவும் கேட்டவர்,
தயவாய் ஈவாரே.
| Text Information | |
|---|---|
| First Line: | தந்தேனிப்போ என் ஆன்மாவை |
| Title: | உம் கரத்தில், உண்மையின் ஆண்டவா |
| English Title: | Into Thine hand, O God of truth |
| Author: | Isaac Watts |
| Translator: | S. John Barathi |
| Language: | Tamil |
| Copyright: | Public Domain |
| Tune Information | |
|---|---|
| Name: | [தந்தேனிப்போ என் ஆன்மாவை] |
| Composer: | Hugh Wilson |
| Key: | G Major or modal |
| Copyright: | Public Domain |
| Media | |
|---|---|
| Adobe Acrobat image: | |
| MIDI file: | |
| Noteworthy Composer score: | |