15834. வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்

1 கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்
நம்பி நிற்கிறேன்,
சதா காலம் அவர் புகழ்
எங்கும் ஒலிக்க,
உன்னதத்தில் மகிமை நான்
உயர்த்தி பாடுவேன்,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.

பல்லவி:
நம்பி நின்றேன்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தம்
என்றும் உண்மை,
நம்பி நிற்பேன், என்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தமே.

2 என்றும் வாக்கு மாறாதந்த
வாக்குதத்தமே,
அவிஸ்வாசம் சந்தேகமும்
வந்து சூழ்ந்தாலும்,
அவர் உண்மை வார்த்தை ஒன்றும்
என்றும் மாறாதே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]

3 நம்பி நின்ற வாக்குத்தத்தம்
நன்று காண்கிறேன்,
என்னையவர் கழுவி சுத்திகரித்தாரே
கட்டவிழ்த்து விடுவித்த
கிறிஸ்து அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]

4 கிறிஸ்து எந்தன் ஆண்டவரே
தந்த வார்த்தையே,
அன்பாய் என்னை கட்டி சேர்த்து
நித்ய வாழ்வுக்காய்,
நித்தம் அவர் தூய ஆவி
சக்தி கொண்டு நான்
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]

5 என்றும் நான் விழாமல் காக்கும்
வாக்குதத்தமே,
சொல்லும் பரிசுத்தாவி நான்
கேட்டு நிற்கிறேன்.
மீட்பர் மீது நம்பி சார்ந்தேன்,
எல்லாம் அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]

Text Information
First Line: கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்
Title: வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்
English Title: Standing on the promises of Christ my king
Author: R. Kelso Carter
Translator: S. John Barathi
Refrain First Line: நம்பி நின்றேன்
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்]
Composer: Russel Kelso Carter
Key: B♭ Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us